புயல் நிவாரணம்: பிலப்பின்ஸிற்கு மேலும் ரூ.120 கோடி தேவை

UN-logo

 

மணிலா, டிச.5 - ஹையான் புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பின்ஸிற்கு நிவாரண உதவிகளைச் செய்வதற்கு மேலும் சுமார் ரூ.120 கோடி தேவை என்று ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. பிலிப்பின்ஸில் கடந்த மாதம் ஹையான் புயல் தாக்கியதில் சுமார் 7,500 பேர் உயிரிழந்திருக்கலாம் அல்லது மாயமாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, பிலிப்பின்ஸிற்கு தேவையான மனிதாபிமான உதவிகளை உலக நாடுகள் முன் வந்து செய்து வருகின்றன. மேலும், ஐ.நா. அமைப்பு சார்பில் பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிலிப்பின்ஸிற்கு உதவுமாறு  உலகம் முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களை அந்த அமைப்பு ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில், பிலிப்பின்ஸில் ஐ.நா. அமைப்பின் மறுவாழ்வுக்கான பிரநிதி தூதரக பிரநிதி பெர்னார்ட் கெர்ப்லாட் கூறுகையில், பிலிப்பின்ஸில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக, தற்போது 119.64 கோடி தேவை என்றார். தேவையாக உள்ள பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகள் கிடைக்காவிட்டால் அவர்களால் வாழ முடியாது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளதுடன், லெயிட் மற்றும் சமர் தீவுகளில் வசிக்கும் மக்கள் அன்றாட வாழ்வுக்கு பெரும் சிரமங்களை எதிர் கொள்கின்றனர். என்று அறிக்கை ஒன்றில் பெர்னார்ட் தெரிவித்துள்ளார். புயலால் நிர்மூலமான பல்வேறு நகர் பகுதிகளில் வசித்து வந்த 40 லட்சம் பேர் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 1,25,000 பேர் ஆகியோருக்கு அவசர உதவிகள் தேவையாக உள்ளன என்று மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ