முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15 வீரர்களுடன் ஆட அனுமதிக்க வேண்டும்: டெண்டுல்கர்

புதன்கிழமை, 4 டிசம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, டிச. 5 - பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் 15 வீரர்களுடன் ஆட அனுமதிக்க வேண்டும் என்று நட்சத்திர வீரரான டெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். 

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டெண்டுல்கருக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் நேற்று முன் தினம் பாராட்டு விழா நடந்தது.  

இந்த விழாவில் கலந்து கொண்டுடெண்டுல்கர் பேசியதாவது _ இளம் வீரர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். 

ஐ.பி.எல். போட்டியை அறிமுகப்படுத்திய தன் மூலம் சிறிய நகரங்களில் கிரிக்கெட் வேகமாக பரவியது.  இன்று சிறிய நகரங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். 

மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு நான் இந்த நேரத்தில் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். பள்ளி ,கல்லூரிகள் இடையேயான போட்டிகளில் 11 பேருக்கு பதிலாக 15 வீரர்களை விளையாட அனுமதிக்க வேண்டும். 

ஏனென்றால் நீண்ட தூரத்தில் இருந்து பயணம் செய்து வரும் வீரர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று உறுதியாக தெரியாத நிலையில் உள்ளனர். 

சில வீரர்கள் ஒரு வருடமாக ஆடியும் பள்ளிகல் போட்டியில் வாய்ப்பை பெற முடியவில்லை. ஒவ்வொரு வீரருக்கும் தங்களது திறமையை நிரூபித்துக் காட்ட குறைந்ஆத பட்சம் 3 போட்டியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். 

அந்த வீரர் சிறந்தவராக உருவாகும் போது மும்பை கிரிக்கெட் சங்கம் ஆதரவு கரம் நீட்ட வேண்டும். இவ்வாறு டெண்டுல்கர் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago