முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெ.ஆ., மைதானங்களில் வேகப் பந்து வீச்சு சவாலானது

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஜோகன்ஸ்பர்க், டிச. 6  - தென் ஆப்பிரிக்கா மைதானங்களில் வேகப் பந்து வீச்சு சவாலானது என்று இந்திய அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். 

கேப்டன் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் டிவில்லியர்ஸ் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஆகியவை நடத்த திட்டமிடப்பட்டது. 

தென் ஆப்பிரிக்கா  மண்ணில் இந்தியா இதுவரை ஒரு நாள் தொடரை வென்றது கிடையாது. தற்போது இந்திய அணி நல்ல நிலையில் உள்ளது. 

எனவே தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர். 

இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நேற்று ஜோகன்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக தோனி அளித்த பேட்டி வருமாறு _ 

தென் ஆப்பிரிக்க மண்ணில் பவுன்சருடன் கூடிய வேகப் பந்து வீச்சு எங்களுக்கு சவாலானது. தென் ஆப்பிரிக்கா போன்ற சர்வதேச நாடுகளில் இளம் வீரர்கள் விளையாடுவது மிகவும் சவாலானது. 

இளம் வீரர்களாக இருந்தாலும் இந்த விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். தற்போது உலகின் தலை சிறந்த பவுலர்களை எதிர் கொள்ள அவர்கள் தயாராக உள்ளனர். 

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டியில் தோற்றால் பின்னர் வரும் போட்டிகள் கடினமாகிவிடும். 

முதல் ஆட்டத்தில் தோற்றால் கூடுதல் நெருக்கடி தான். அதற்கு ஏற்ற வகையில் முதல் ஆட்டத்தில் வெல்லும் வகையில் போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார். 

டேல் ஸ்டெயின், மார்னே மார்கெல், பிளாண்டர் போன்ற உலகின் தலைசிறந்த வேகப் பந்து வீச்சாளர்கள் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம்  பெற்று உள்ளனர். 

தென் ஆப்பிரிக்கா கேப்டன் டிவில்லியர்ஸ் கூறியதாவது_ சொந்த மண்ணில் விளையாடுவது எங்களுக்கு தான் அதிகமான நெருக்கடி. 

நாங்கள் சமீபத்தில் ஒரு நாள் தொடரை பாகிஸ்தானிடம் இழந்தோம். இதனால் நம்பிக்கை அதிகமானதாக இல்லை. 

பாகிஸ்தான் தொடரை சொந்த மண்ணில் இழந்ததால் தான் நெருக்கடி ஏற்பட்டது. ஆனாலும் நம்பர் _1 அணியான இந்தியாவை தோற்கடிக்க முடியும் என்று நினைக்கிறேன். 

எங்கள் அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். அதே நேரத்தில் இந்தியஅணியில் தலை சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்