முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளவரசி டயானா அணிந்த கவுன் ரூ.1 கோடிக்கு ஏலம்

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், டிச. 7  - இங்கிலாந்து இளவரசர் சார்லசின் முதல் மனைவி இளவரசி டயானா, அழகு பதுமையாக உலக மக்களை கவர்ந்த இவர் சார்லசை பிரிந்து தனியாக வசித்தார். பின்னர் பிரான்சில் நடந்த கார் விபத்தில் அகால மரண மடைந்தார். 

இளவரசி டயானா இங்கிலாந்து அரண்மனையில் வசித்தபோது, விலை உயர்ந்த கவுன் அணிந்து இருந்தார். அந்த உடையில் வைரம், தங்கம், முத்து, கிரிஸ்டல் போன்றவை பதிக்கப்பட்டு இருந்தது. டேவிட், எலிசபெத், இமானுவேல் ஆகியோர் இந்த உடையை வடிவமைத்து இருந்தனர். 

ஜேம்ஸ் பாண்ட் நடித்த இன் தி லிவிங்டே லைட்ஸ் என்ற ஆங்கிலப் படம் வெளியிடப்பட்ட போது அதன் அறிமுக நிகழ்ச்சியில் இளவரசி டயானா இந்த கவுன் அணிந்துதான் கலந்து கொண்டார். 

இது போல பல முக்கிய நிகழ்ச்சிகளில் டயானா இந்த கவுன் அணிந்து தான் கலந்து கொள்வார். அப்போது இந்த கவுன் பிரபலமாக பேசப்பட்டது. 

லண்டனில் உள்ள ஒரு நிறுவனம் வசம் இந்த கவுன் இருந்தது. அந்த நிறுவனம் டயானாவின் கவுனை ஏலம் விடப் போவதாக அறிவித்தது. 

அந்த கவுனை ஏலம் எடுக்க பலர் போட்டி போட்டனர். கடைசியில் லண்டனைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் டயானா கவுனை ரூ. 1 கோடியே 2 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார். ஏலம் எடுத்தவர் பெயர் விவரங்களை அந்த நிறுவனம் ரகசியமாக வைத்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்