முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டேலா இறுதிச் சடங்கு: பிரதமர் - சோனியா பங்கேற்பு

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

ஜோகன்ஸ்பர்க், டிச. 8 - சமீபத்தில் மரணமடைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் மண்டேலாவின் இறுதிச்சடங்கில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சோனியா காந்தி இருவரும் பங்கேற்கின்றனர். 

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (95) நேற்று முன் தினம் ஜோகன்ஸ்பர்க் நகரில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார். 

இதன் இறுதிச் சடங்கு வருகிற 15_ம் தேதி அவரது சொந்த கிராமமான குலுவில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக நெல்சன் மண்டேலா வின் உடல் ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

அங்கு உடல் பதப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள யூனியன் கட்டிடத்தில் பொது மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு உள்ளது. 

அங்கு அணி அணியாக சென்று மக்கள் அவரது உடலுக்கு கண்ணீர்அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதிச் சடங்கில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். 

இந்தியா சார்பிலும் உயர் மட்டக் குழுவினர் பங்கேற்கின்றனர். ஆனால் அதில் கலந்து கொள்பவர்கள் யார் என்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. 

இருந்தாலும் பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மண்டேலாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா செல்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையே மண்டேலாவின் ஆன்மா அமைதி பெற இன்று நடைபெறும் பிரார்த்தனையில் நாட்டு மக்கள் பங்கேற்கும்படிதென் ஆப்பிரிக்கா அதிபர் ஜேக்கப் ஜுமா வேண்டுகோள் விடுத்து உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்