முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

டர்பன், டிச. 8 - இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2_வது ஒரு நாள் போட்டி டர்பன் நகரில் இன்று நடக்கிறது. 

முதல் போட்டியில் தெ.ஆ. அணி வெற்றி பெற்றாதால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் டிவில்லியர்ஸ் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. 

இதன் முதல் போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்தது. இதில் தெ. ஆ. அணி 141 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய தெ.ஆ. அணி வெளுத்துக் கட்டியது. துவக்க வீரர் டிகாக் சதம் அடித்தார். கேப்டன் டிவில்லியர்ஸ் மற்றும் டுமினி இருவரும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தனர். 

இதனால் தெ. ஆ. அணி முதல் போட்டியில் 4 விக்கெ ட் இழப்பிற்கு 358 ரன்னைக் குவித்தது. இந்திய பௌலர்களால் தெ. ஆ. பேட்ஸ்மேன்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. 

பின்பு களம் இறங்கிய இந்திய அணி தெ.ஆ. பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் 41 ஓவரில் 211 ரன்னில் ஆட்டம் இழந்தது. 

இந்திய அணி தரப்பில் கேப்டன் தோனி ஒருவர் மட்டும் தாக்குப் பிடித்து ஆடி அரை சதம் அடித்தார். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். 

தென் ஆப்பிரிக்க அணியின் வேகப் பந்து வீச்சாளர்களான டேல் ஸ்டெயின், மார்னே மார்கெல் மற்றும் மெக்லாரன் ஆகியோர் தரமான பந்துகளை வீசி இந்திய வீரர்களுக்கு சிரமத்தை அளித்தனர். 

இந்திய பௌலர்களில் மொகமது ஷமி ஒருவர் மட்டும் நன்றாக பந்து வீசினார். மற்ற வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். கடைசி 10 ஓவரில் இந்திய அணி 135 ரன்னை அள்ளிக் கொடுத்தது. 

முன்னதாக நடந்த முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றதால், தெ. ஆ. அணி இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தொட ரைக் கைப்பற்ற ஆர்வத்துடன் களம் இறங்குகிறது. 

இந்திய அணி முதல் போட்டியில் மோசமாக தோற்றதால் இன்றைய ஆட்டத்தில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்குகிறது. 

இந்திய அணியில் ஷிகார்தவான், ரோகித் சர்மா, விராட் கோக்லி, கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங் மற்றும் ரவீந்திர ரஜடேஜா ஆகிய சிறந்த வீரர்கள் உள்ளனர். 

தென் ஆப்பிரிக்க அணியில் டிகாக், டுமினி, காலிஸ், டிவில்லியர்ஸ், ஆம்லா ஆகிய சிறந்த பேட்ஸ்மேன்களும், ஸ்டெயின், மார்கெல் மற்றும் மெக்லாரன் ஆகிய சிறந்த பௌலர்களும் இடம் பெற்று உள்ளனர். 

இந்தியா மற்றும் தெ.ஆ. அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி டர்பன் நகரில் இன்று பிற்பகல் (இந்திய நேரப்படி) 1.30 மணிக்கு துவங்குகிறது.  இந்தப் போட்டி தூர்தர்ஷன், டென் ஸ்போர்ட்ஸ் மற்றும் டென் கிரிக்கெட் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்