முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிஸ் எர்த் போட்டி: வெனிசுலா பெண் வக்கீலுக்கு பட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2013      சினிமா
Image Unavailable

 

மணிலா, டிச. 9  - பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற மிஸ் எர்த் உலக அழகிப் போட்டியில் வெனி சுலாவைச் சேர்ந்த பெண் வக்கீல் வெற்றி பெற்று மகுடம் சூட்டினார். 

மிஸ் எர்த் 2013 உலக அழகிப் போட்டி பிலிப்பைன்ஸ் நாட்டின் லாஸ் பினாஸ் நகரில் உள்ள வெர்சைல்ஸ் அலாபாங்கில் நடந்தது. 

அதில் இந்தியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த 88 அழகிகள் கலந்து கொண்டனர். பலவித சுற்றுக்களாக போட்டிகள் நடத்தப் பட்டன. நேற்று முன் தினம் இதன் இறுதிப் போட்டி நடந்தது. 

மேற்படி அழகிகளில் வெனிசுலாவைச் சேர்ந்த ஆலிஷ் ஹென்ரிச் என்பவர்  மிஸ் எர்த் உலக அழகி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். 22 வயதான அவர் மாடல் அழகி ஆவார். 

இவர் தவிர, மிஸ் எர்த் நெருப்பு அழகி ஆக கொரியாவைச் சேர்ந்த கத்ரீனாவும், மிஸ் எர்த் நீர் அழகி ஆக தாய்லாந்தைச் சேர்ந்த புனிகா குல்சூன் டோராட்டும், மிஸ் எர்த் காற்று அழகி ஆக ஆஸ்திரியாவைச் சேர்ந்த காதியா வாக்னரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

மிஸ் எர்த் அழகி ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலிஷ் ஹென்ரிச் மாடல் அழகி ஆவார். இவர் வெனிசுலாவின் பால்கான் மாகாணத்தில் உள்ள லாஸ் தகூள் நகரைச் சேர்ந்தவர். 

கடந்த மாதம் நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியிலும் வெனிசுலா அழகி காபிரி யலா இஸ்லெர் பட்டம் வென்றார். 

தற்போது அதே நாட்டைச் சேர்ந்த ஆலிஷ் ஹென்ரிச் மிஸ் எர்த் பட்டம் வென்றுள்ளார். அதன் மூலம் இந்த ஆண்டு நடந்த 2 அழகிப் போட்டிகளிலும் வெனிசுலா அழகிகள் பட்டம் பெற்றுள்ளனர். 

மிஸ் எர்த் அழகி போட்டியில் இந்தியா சார்பில் ஷோபிதா துலிபாலா கலந்து கொண்டார். அதில் அவர் முதல் 16 _ வது இடத்துக்கு கூட வர முடியாமல் தோல்வி அடைந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago