முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா மசோதாவை முறியடிப்போம்: கிரண்குமார்

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

சித்தூர், டிச.9 - தெலுங்கானா மசோதா சட்ட மன்றத்துக்கு வந்தால் அதை முறியடிப்போம். மாநில பிரிவினைக்கு எதிராக தொடர்ந்து போராடத் தயாராக உள்ளேன் என்று  ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆவேசமாக் கூறினார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் போலாவரம் அணை குடிநீர்த் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. அப்போது கிரண்குமார் ரெட்டி பேசியதாவது:

ஆந்திர மாநில மக்கள் சகோதரர்கள் போலவும்,  ஒரு தாய் மக்கள் போலவும் இருந்தனர். மாநில பிரிவினையால்   அவர்கள் அடித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  தெலுங்கானா குறி த்து பலர், பலவிதமாகப் பேசி வருகின்றனர். ஆனால் ஒருங்கிணைந்த ஆந்திரா என்ற முடிவில் மாற்றம் இல்லை. மாநில பிரிவி னையை நான் ஒருபோதும் ஏற்க மாட்டே ன். மாநிலத்தை பிரித்தே தீருவோம் என்று மத்தியில் இருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தெலுங்கானா மசோதா சட்ட மன்றத்துக்கு வந்தால் அதை முறியடிப்போம். மத்திய அமைச்சர்கள் குழு தெலுங்கா னாவுக்கு ஒப்புதல் அளித்து அதற்கான அறிக்கையை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அதை ஆய்வு செய்து தகுந்த முடிவு எடுப்பார். தெலுங்கானாவுக்கு ஆதரவாக ஜனாதி பதியின் முடிவு இருக்குமானால் அதை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆந்திர மாநிலத்தை இணைத்து அழகு பார்த்தார். இப்போது தலைமையில் இருப்பவர்கள் மாநிலத்தை பிரிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். மாநிலம் பிரிக்கப்பட்டால் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப் படுவார்கள். நீராதாரம் பாதிக்கப்படும். மின் உற்பத்தி முடங்கும். இதையெல்லாம் சரிசெய்ய சீமந்தராவுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி தேவைப்படும். இதை மத்திய அரசு வழங்குமா?. 

ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு எதிரான முடிவிலிருந்து மத்திய அரசு பின் வாங்க வேண்டும். மாநில பிரிவினையை எதிர்த்துப் போராடத் தயாராக உள்ளேன் என்று கிரண்குமார் ரெட்டி பேசினார்.

      

  

   

                        

    

  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்