முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிசோரமில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ்

திங்கட்கிழமை, 9 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

ஐஸ்வால், டிச.10 - மிசோரம் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

மொத்தம் 40 தொகுதிகள் கொண்ட மிசோரமில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி மற்றும் முன்னணி நிலவரம் வெளியாகிவிட்டது.

காங்கிரஸ் 23 இடங்களில் வெற்றியும், 8 இடங்களில் முன்னிலையும் பெற்று, 31 இடங்களைக் கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. பெரும்பான்மைக்குத் தேவையான 21 இடங்கள் கிடைத்துவிட்டது.

மிசோ மாநாட்டு கட்சி 4 இடங்களில் வெற்றியும், 4 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது. பாஜக ஓர் இடத்தில் முன்னிலை வகிக்கிறது.

டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடும் பின்னடைவைச் சந்தித்த காங்கிரஸுக்கு, மிசோரம் வெற்றி ஆறுதலைத் தந்துள்ளது.

நான்கு முறை முதல்வர் பதவியை வகித்தவரும், தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் முதல்வராகவுள்ள காங்கிரஸின் பழம்பெரும் தலைவர் லால் தன்ஹாலா, மிசோரமில் காங்கிரஸ் அரசின் நிர்வாகத்துக்கு கிடைத்துள்ள வெற்றி என கருத்து தெரிவித்துள்ளார்.

மிசோரமில் காங்கிரஸின் லால் தன்ஹாலா முதல்வராக இருக்கிறார். 10 ஆண்டுகள் கழித்து 2008-ல்தான் காங்கிரஸ் இங்கே ஆட்சிக்கு வந்தது.

இங்கே இந்த முறையும் காங்கிரஸ்தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று உறுதியாகச் சொல்லிவிடும் சூழல் நிலவுகிறது.

மிசோ மக்கள் மாநாட்டுக் கட்சி, மாராலாந்த் ஜனநாயகக் கட்சி என இதர கட்சிகள் எல்லாம் இங்குள்ள வெவ்வேறு பழங்குடிப் பிரிவினரின் தனிக்கட்சிகள் ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்