முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னா ஹசாரே இன்று மீண்டும் உண்ணாவிரதம்

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

மும்பை, டிச. 10  - ஊழல் எதிர்ப்பு செயல்பாட்டாளரான அன்னா ஹசாரே லோக்பாலை வலியுறுத்தி இன்று முதல் மீண்டும்         உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். 

டெல்லியில் கடந்த வருடம் அன்னா ஹசாரே, அரவிந்த கெஜ்ரிவால் ஆகியோர் இணைந்து லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி நடத்திய உண்ணாவிரதம் பொது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 

அதன் பின்னர் தேர்தலில் பங்கேற்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரவிந்த கெஜ்ரிவால் , அன்னா ஹசாரேயிடம் இருந்து பிரிந்து ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார். 

கெஜ்ரிவால் கட்சி சமீபத்தில் முடிந்த டெல்லி தேர்தலில் 28 இடங்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்த்கது. 

அவரது கட்சிக்கு அன்னா ஹசாரே பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. 

இது குறித்து அன்னா ஹசாரே நிருபர்களிடம் கூறியதாவது_ மகாராஷ்டிராவில் எனது சொந்த கிராமமான ராலேகான் சித்திக்கில் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று முதல் தொடங்குகிறேன். 

இந்தக் கூட்டத் தொடரிலேயே முழுமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இதனை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன் என்று முன்பு மக்கள் முன்பாக வாக்களித்திருந்தேன் . 

எனது உடல்நிலையையொட்டி டாக்டர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் எனது சொந்த ஊரிலேயே இந்த உண்ணா விரத போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்