முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 மாநில தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களித்த வாக்களர்கள்

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.10 - 4 மாநிலங்களில் நடைபெற்ற சட்ட சபை தேர்தலில் நோட்டாவுக்கு 16 லட்சம் வாக்களர்கள் வாக்களித்துள்ளனர். வாக்களிக்க விரும்பும் வாக்காளர்கள் அவர்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் வகையில் சின்னம் இடம் பெற்றுள்ளது. அதில் அவர்கள் வாக்களிக்கிறார்கள். இதில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்களர்களு க்காக நோட்டா அமைக்கப்பட்டுள்ளது.

2009_ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 49ஓ  என்ற பாரத்தை நிரப்பிக்  கொடுக்கும் முறை அறிமுகமானது. தற்போது நடந்த 5 மாநில சட்ட சபை  மற்றும் ஏற்காடு இடைத் தேர்தலில் முதல் முறையாக வாக்குப் பதிவு இயந்திரத்திலேயே வேட்பாளர்களின் சின்னங்களை அடுத்து நோட்டா பொத்தான் அமைக்கப்பட்டு இருந்தது. எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் இந்த பொத்தானை பயன்படுத்தி கொள்லம் வசதி செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், டெல்லி ஆகிய 4 மாநிலங்களில் நடைபெற்ற சட்ட சபை தேர்தலில் 16 லட்சம் பேர் நோட்டாவில்  வாக்களித்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் எந்த வேட்பாளருக்கும் வாக்கலிக்க விரும்பவில்லை என்பதை அவர்கள் பதிவு செய்துள்ளனர். மத்தியபிரதேசத்தில் 230 தொகுதிகளில் 6 லட்சத்து 20 ஆ யிரம் பேரும், ராஜஸ்தானில் 5 லட்சத்து 88 ஆயிரத்து 411 பேரும், சத்தீஷ்கரில் 4 லட்சம் பேரும், டெல்லியில் 47 ஆயிரத்து 972 பேரும் நோட்டாவை பயன்படுத்தியுள்ளனர்.

ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலில் 11பேர் போட்டியிட்டனர். இங்கு  4 ஆயிரத்து 431 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.  நோட்டாவுக்கு 3_வது இடம் கிடைத்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago