முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாகனங்களில் சுழல் விளக்கு: உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.11 - அரசியல் அமைப்பு பதவி வகிப்பவர்கள், அரசு உயர் அதிகாரிகள் வாகனங்களில் மட்டுமே சிவப்பு சுழல் விளக்கு பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

சுழல் விளக்கு பொருத்தப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதேபோல், நீல நிற சுழல் விளக்குகளை காவல்துறை மற்றும் பிற அவசர வாகனங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவை எழுப்பும் ஓசையின் அளவு அதீதமாக இருக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.

மேலும், வாகனங்களில் சிவப்பு சழல் விளக்கு பொருதிக் கொள்ளும் தகுதியுடைய முக்கியப் பிரமுகர்கள் பட்டியலை மாநில அரசுகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விரிவாக்கம் செய்ய முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதன் படி, மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. காவல் துறையினர் எவ்வித அச்சமும் பாரபட்சமும் இல்லாமல் இதனை செயல்படுத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்