இந்தோனேசியாவில் ரயில் மோதி 10 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

ஜாகர்தா,டிச.11 - ஆயில் ஏற்றிச்சென்ற டிரக் வண்டி தண்டவாளத்தை கடந்த போது அந்த வழியாக வந்த பயணிகள் ரயில் டிரக் மீது மோதியது. இதில் 2 ரயில் பெட்டிகள் தீப்பிடித்தன. இச்சம்பவத்தில் இன்ஜின் டிரைவர், பெண் பயணிகள் உள்பட 10 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தோனேஷியா தலைநகர் ஜாகர்தாவில் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு மாவட்டத்தில் ஆளில்லாத லெவல் கிராசிங்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: