முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாபர்சேட் மீது ஊழல் வழக்கு பதிய அரசு அனுமதி மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, டிச.11 - முன்னாள் போலீஸ் உயர்அதிகாரி  ஜாபர்சேட் மீது ஊழல் வழக்கு பதிவுசெய்ய மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பான அரசு ஆணையை மத்திய அரசு வழக்கறிஞர் பவானி சுப்புராவ் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். கடந்த திமுக ஆட்சியின்போது தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு தலைமை பொறுப்பில் ஜாபர் சேட் இருந்தார். இவர் பதவியிலுருந்த போது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. இதில் ஜாபர்சேட் உண்மைகளை மறைத்து வீட்டு வசதி வாரியமனை ஒதுக்கீட்டைப் பெற்று பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த  புகாரின் பேரில் போலீஸார் ஜாபர்சேட் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.   புகாரின் அடிப்படையில் அவரை தமிழக அரசு பணிநீக்கம் செய்தது.

இந்த நிலையில் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் 750 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராக ஜாபர்சேட் மற்றும் அவரது மனைவிக்கு விஷேச கோர்ட் சம்மன் அனுப்பியது.  இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று என்று ஐகோர்ட்டில் ஜாபர்சேட் மனு தாக்கல் செய்தார். 

 இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு வக்கீல் பவானி சுப்புராவ் ஆஜராகி மத்திய அரசின் ஆணையை தாக்கல் செய்தார்.  அதில் குடிசை மாற்று வாரிய வீட்டு மனை வாங்கியதில் ரூ.1.49 கோடி ஏமாற்றியதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் ஜாபர்சேட் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியது. 

இதில் ஜாபர்டேட்டுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை. அதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்க முடியாது என்று அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இதற்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு  தமிழக அரசுக்கு உத்தரவிட்டு ஜனவரி 7_ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். 

                                   

 

 

 

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்