முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஷ்கரில் பயந்து நோட்டாவுக்கு வாக்களித்த வாக்காளர்கள்

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

ராய்ப்பூர், டிச.11 - சத்தீஷ்கரில் நக்ஸலைட்டுகளுக்கு பயந்து நோட்டாவுக்கு வாக்காளர்கள் வாக்களி த்துள்ளனர். சமீபத்தில் நடைவெற்ற 5 மாநில சட்ட சபை மற்றும் ஏற்காடு இடைத் தேர்தலில் நோட்டோ முறை பயன்படுத்தப்பட்டது. எந்த வேட்பாள ருக்கும் வாக்கலிக் விரும்பாத வாக்காள ர்கள் நோட்டோவுக்கு வாக்களித்துள்ளனர். அதாவது 16 லட்சம் பேர் நோட்டோ வுக்கு வாக்களித்துள்ளனர்.  

நக்ஸலைட்டுகள் அதிகம் காணப்படும் சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்ஸலைட்டுகளுக்குப் பயந்து பலர் நோடோவுக்கு வாக்களித்துள்ளனர். சத்தீஷ்கர் மாநிலத்தில் 90 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடந்தது. இதில் 4 லட்சம் பேர் நோட்டோவுக்கு வாக்களித்தனர். நக்ஸலைட்டுகலுக்கு பயந்துதான் இவர்கள் நோட்டோவுக்கு  வாக்களித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. வேட்பாளர்களை நிராகரிக்குமாறு நக்ஸலைட்டுகள் ஏற்கெனவே மிரட்டியிருந்தனர். வாக்களித்தால் மை பதிந்த விரலை வெட்டுவோம் என்றும், வாக்களிக்க கூடாது என்றும் அவர்கள் மிரட்டி வைத்திருந்தனர். 

பஸ்டர் தொகுதியில் தான் 78,186 பேரும், சித்ரகோட் தொகுதியில் 10,848 பேரும், தண்டிவாடாவில் 9677 பேரும் நோட்டோ வுக்கு வாக்களித்துள்ளனர். இந்த இடங்கள் எல்லாம் நக்ஸலைட்டுகள் அதிகம் காணப்படும் பகுதிகளாகும். இதுபற்றி முன்னாள் தேர்தல் அதிகாரி சுசில் திரிவேதி கூறியாதவது:

மாவோயிஸ்ட்கள் அதிகம் உள்ள பகுதியில் மக்கள் நோட்டோவை அதிகம் பயன்படுத்தியுள்ளனர். இனிமேல் ஒவ்வொரு தேர்தலிலும்  நோட்டோவை பயன்படுத்துமாறு நக்ஸலைட்டுகள் கூறுவார்கள் என்று அவர் தெரிவித்தார். 

               

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்