முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இணய மாட்டேன்: எடியூரப்பா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், டிச.11 - பா.ஜ.க.வில் இணைய மாட்டேன் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடக ஜனதா கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பின்னர் நிருபர்களிடம் கூறிய தாவது:

பா.ஜ.க.வில் சேருமாறு எனக்கு அதிகாரப் பூர்வமாக கடிதம் எதுவும் வரவில்லை.  தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவது குறித்து நான் எழுதிய கடிதத்துக்கு இன் னும் பதில் வரவில்லை. பாஜகவில் கர்நாசக ஜனதா கட்சியை இணைப்பது குறித்து வரும் செய்திகள் அனைத்தும் தவறானவை. எனது உடம்பில் தெம்பு இருக்கிறது. அதனால் 10 ஆண்டுகளுக்கு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்ப்பேன் என்றார் எடியூரப்பா.         

      

 

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்