முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் கலாபவன் மணிக்கு ரூ.7 ஆயிரம் அபராதம்

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2013      சினிமா
Image Unavailable

 

திருவனந்தபுரம், டிச.11 - மலையாள நடிகர் கலாபவன் மணிக்கு ரூ. 7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இவர் குவைத் நாட்டுக்கு சென்றார். அங்கிருந்து திரும்பி வரும்போது அளவுக்கு அதிகமாக நகை கொண்டு வந்தாராம். அவர் அணிந்திருந்த பிரஸ்லெட் 181 கிராம் எடை இருத்ததாகவும் அதற்கு வரி கட்ட வேண்டும் என்று சுங்க இலாகா அதிகாரிகள் கூறினார்களாம். 

அந்த நகையை நான் இங்கிருந்து போகும்தே அணிந்து சென்றேன் என்று கலாபவன் மணி கூறினார். அவர் கொண்டு செல்லும் நகைகளை சுங்க இலாகா அதிகாரிகளிடம் தெரிவித்து அதனை பதிவு செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு அவர் பதிவு செய்யவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே அவர் அந்த நகையை விமான நிலையத்தில் வீசி எறிந்து விட்டு சென்றதாக செய்தி வெளியானது. 

இதையடுத்து அவர் சுங்க இலாகா அலுவலகத்தில் இம்மாதம் 9_ம்தேதி ஆஜராக வேண்டும் என்று கூறினர். அதன்படி அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. வெளிநாடு சென்று திரும்புபவர் 7 கிராம் நகை மட்டும் கொண்டு வரலாம். ஆனால் கலாபவன் மணி 20 கிராம் நகை கொண்டு வந்துள்ளார். எனவே அவர் ரூ. 7 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். அந்க நகையை அவரிடமே கொடுத்து அனுப்பினர். 

                          

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago