முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலோர பாதுகாப்பு பணிக்கு மேலும் ஒரு ரோந்து கப்பல்

புதன்கிழமை, 11 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை,டிச.12 - கடலோர பாதுகாப்பு பணிக்கு மேலும் ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அர்ப்பணித்தார்.

இந்தியாவில் கிழக்கு கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பணி மற்றும் பேரிடர் நிவரண பணிகளை மேற்கொள்வதற்காக 'ராஜ்ட்வாஜ்' எனும் அதிநவீன ரோந்து கப்பல் நாட்டுக்கு  அர்ப்பணிக்கப்பட்டது.

சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்ட்வாஜ் ரோந்து கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்திய கடலோர பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் அனுராக் ஜி.தாபிலியால், இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.பி.சர்மா உள்பட கடலோர பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசியதாவது:_

கடல்சார் பயணத்துடைய முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இந்திய கடலோர காவல் படையின் முக்கிய நோக்கமான ''சேவை செய், பாதுகாப்பை அளி'' என்பதை மேலும் சிறப்பாக்கிட ராஜ்ட்பாஜ் எனும் ரோந்து கப்பல் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

சிப்பந்திகள் கப்பலின் உள்ள ஒவ்வொரு தொழிற்நுட்ப நுணுக்களையும் சிறப்பாக வெளிப்படுத்தி தங்கள் பணியில் மகுடம் சூட்டுவார்கள். நாட்டின் கடல் சார் பயணத்தின் ஓட்டுமொத்த பாதுகாப்பு அளிப்பதை குறிகோளாக இந்திய கடற்படையும், கடலோர காவல் படையும் இணைத்து ஒன்றாக சிறப்பாக செயலாற்றி வருகிறது. மிகவும் முக்கியமாக கடற்கொள்ளையை முறியடித்தல், கடத்தலை தடுத்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல், பேரிடர் கால உதவி, மீட்பு பணி ஆகிவற்றை மிக சிறப்பாக இந்திய கடற்படையும், கடலோர காவல் படையும் இணைந்து பணியாற்றி வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சி முடிவில் மத்தியஅமைச்சரஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:_

இலங்கை கடற்படையினரால் தமிழர்கள் மீனவர்கள் தாக்கப்படுவதும், வலைகள் கிழித்து எறியப்படுவதுமான கொடூரம் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் வண்ணம் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் சமூகநல கூட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும் இலங்கை கடல்சார் பகுதியில் மீறல்களை 24 மணி நேரமும் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.

சோமாலியாவில் ஏடன் வளைகுடா கடல் பகுதியில் கடற்கொள்ளையர்கள் அட்டூழியத்தை ஒழிப்பதற்காக்க உலக நாடுகளுடன் இணைந்து இந்திய கடலோர காவல் படை சர்வதேச ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான், இலங்கை, மியான்மர், வங்காள தேசம், தாய்லாந்து உள்பட நாடுகளை சேர்ந்த 359 மாலுமிகளும், 61 கப்பல்களும் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. இதில் 275 மாலுமிகளும், 52 கப்பல்களும் இலங்கையை சேர்ந்தது. 120 கடற்கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

சிங்கப்பூரில் தமிழர்கள் தாக்கப்பட்டிருப்பது தொடர்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்