முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சிகள் பெறும் நன்கொடை தணிக்கைக்கு உள்ளாக்கப்படுமா?

புதன்கிழமை, 11 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.12 - அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள் கட்டாய தணிக்கைக்கு உள்ளாக்கப்படுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் நேற்று லோக்சபையில் தெரிவித்துள்ளார். 

நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகள் தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து நன்கொடை பெறுகின்றன. இதை தணிக்கை செய்ய வேண்டும் என்று ஒருசிலர் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து லோக்சபையில் உறுப்பினர்களின் கேள்விக்கு எழுத்துமூலமாக மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கூறுகையில் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை மத்திய தணிக்கைக்குழு அங்கீகாரம் அளிக்கும் ஒரு தணிக்கையாளர் மூலம் ஆய்வு செய்து அதை வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது.  கட்டாய தணிக்கைக்கு உள்ளாக்குவது குறித்து இன்னும் அரசு முடிவு செய்யவில்லை என்றார். அரசியல் கட்சிகளும் தாங்கள் பெறும் நன்கொடை குறித்து சட்டப்படி வெளியிட்டு வருகின்றன என்றும் கபில் சிபல் கூறினார். 

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 29_பி பிரிவின்படி ஒரு அரசியல் கட்சியானது அரசு கம்பெனியை தவிர தனியார் கம்பெனியிடமும் தனி நபரிடமும் நன்கொடை பெற்றுக்கொள்ளலாம். அதே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 29 சி பிரிவின் படி ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் நன்கொடை பெற்றால் அதை தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்க வேண்டும். அரசியல் கட்சியின் தேர்தல் செலவில் பாதியை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்திரஜித் குப்தா தலைமையிலான கமிட்டியானது மத்திய அரசுக்கு சிபாரிசு செய்துள்ளது. ஆனால் இதுகுறித்து கருத்து வேறுபாடு நிலவுகிறது. அதனால் அந்த கமிட்டியின் சிபாரிசு இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்றும் கபில் சிபல் தெரிவித்தார். கடந்த நவம்பர் மாதம் 3_ம் தேதி வரை நாட்டில் ஆயிரத்து 583 அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவைகளில் தேசிய கட்சிகள் 6, மாநில கட்சிகள் 46 மற்றவைகள் இன்னும் பதிவு செய்யப்பட்டதாக தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago