முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

ஜோக்ன்ஸ்பர்க்,டிச.15 - தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபரும் கறுப்பனர் இனத்தலைவருமான நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கு இன்று அவரது சொந்த ஊரில் இன்று நடக்கிறது. இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது. 

தென்னாப்பிரிக்காவில் இனவெறியை ஒழிக்க காந்தீய வழியில் போராடியவர் நெல்சன் மண்டேலா. இதற்காக அவர் வெள்ளையர் அரசால் சுமார் 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இனவெறியை ஒழிக்க பாடுபட்ட நெல்சன் மண்டேலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலகப்புகழ் பெற்ற மண்டேலா தனது 95_வது வயதில் கடந்த 5_ம் தேதி ஜோகன்ஸ்பர்க் நகரில் மரணமடைந்தார். அவரது மறைவால் உலகமே சோகத்தில் மூழ்கியது. ஜோகன்ஸ்பர்க் நகரில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கடந்த செவ்வாய்கிழமை அன்று மண்டேலாவுக்கு ஜோகன்ஸ்பர்க் நகரில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட உலக தலைவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதன் பின்னரும் பொதுமக்கள் அஞ்சலிக்கு அவரது உடல் வைக்கப்பட்டது. இந்தநிலையில் மண்டேலாவின் உடல் அடக்கம் பிரிட்டோவில் உள்ள குனு என்ற கிராமத்தில் இன்று நடக்கிறது. இதற்காக ஜோகன்ஸ்பர்க் நகரில் இருந்து அவரது உடல் நேற்று குனு கிராமத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் அடக்கம் இன்று செய்யப்படுகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்