முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்சில் வேன் மீது பஸ் விழந்ததில் 22 பேர் பலி

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

மணிலா, டிச.17 - பாலத்தில் இருந்து தவறி விழந்த பஸ், கீழே சென்று கொண்டிருந்த வேன் மீது விழுந்ததில், 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் புறநகர் பகுதியான தக்குயிக்கில் நேற்று அதிகாலை பாலத்தில் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அது திடீரென பாத்தில் இருந்து தவறி கீழே விழுந்தது. அது நேராக கீழே சென்று கொண்டிருந்த வேன் ஒன்றின் மீது விழுந்தது. சம்பவம் நடந்தபோது, மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக சாலை முழுவதும் ஈரமாக இருந்தது. இதில் வேகமாக பஸ் வந்ததால், திருப்பத்தில் நிலைக்குலைந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். டான் மரியானோ என்ற நிறுவனத்திற்கு சொந்தமான அந்த பயணிகள் பஸ் மணிலாவில் இருந்து பாசிட்டாவுக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. இச் சம்பவத்தில் பஸ், பல பாகங்களாக சிதறிக் கிடந்தது. பஸ் விழுந்ததில், வேன் உருத் தெரியாத அளவுக்கு மாறியிருந்தது. பஸ்சுக்கு அருகே பலரது உடல்கள் சிதறி கிடந்தன. இந்த விபத்தில் 22 பேர் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் வேன் டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி இறந்துவிட்டார். பஸ் டிரைவர் படுகாயம் அடைந்துள்ளார். காயம் அடைந்தவர்கள் அனைவரும் எலிசபெத் வெலாஸ்குஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். பஸ் விபத்தை நேரில் பார்த்த இரேசன் சிஸ்பெரஸ் என்ற பெண் கூறுகையில், "நான் 80 கி.மீ. வேகத்தில் என் காரில் சென்று கொண்டுருந்தேன். அப்போது விபத்துக்கு உள்ளான பஸ் என் காரை வேகமாக முந்திச் சென்றது. அதன் மூலம் அது 110 கி.மீ. வேகத்தில் சென்றிருக்கலாம் என்று கருதுகிறேன். முன்னால் சென்ற பஸ் திடீரென பாலத்தில் இருந்து கீழே விழுவதை பார்த்தேன். உடனடியாக அங்கு காரை நிறுத்தி பார்த்தேன். கீழே பலர் மரண ஓலமிடுமது தெரிந்தது. உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தேன். மழையால் சாலை வழுக்கிக் கொண்டிருந்ததால், இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கருதுகிறேன்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்