முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடையாள அட்டைகளை திருப்பி அளிக்க இந்தியா உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், டிச. 18 - அமெரிக்க தூதரக அதிகாரிகள், அவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை திரும்பத் தர வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் உள்ள அமெரிக்க அதிகாரிகள் அனுபவித்து வரும் சலுகைகளும் மறு ஆய்வு செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவை தரக்குறைவாக நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா இந்த நடவடிக்கைக்களை மேற்கொண்டுள்ளது.

மேலும், அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு விமான நிலையங்களில் வழங்கப்படும் சலுகையை திரும்பப் பெறுவதாகவும் அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க தூதரக அலுவலகங்களில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்த விவரங்களை அரசுக்கு அளிக்குமாறும் கோரியுள்ளது.

அதே போல் தூதரக அதிகாரிகள் வீடுகளில் பணியாற்றும் பணியாட்களுக்கு வழங்கப்படும் ஊதிய விவரத்தையும் அரசு கோரியுள்ளது.

அமெரிக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விசா விபரங்கள், அங்கு பணி புரியும் இந்தியர்களின் சம்பள விபரமும் கோரப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்