முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதர்ஷ் ஊழல்: மாஜி முதல்வர் மீது வழக்குக்கு அனுமதி மறுப்பு

புதன்கிழமை, 18 டிசம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

மும்பை, டிச.19 - மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஆதர்ஷ் கட்டிட ஊழல் தொர்பாக மாஜி முதல்வர் அசோக் சாவன் மீது வழக்கு தொடர சி.பி.ஐ.க்கு மாநில கவர்னர் சங்கர நாராயணன் அனுமதி மறுத்துள்ளார். மும்பையில் கடந்த 2010-ம் ஆண்டு கொலபா கடற்படை தளத்துக்கு அருகே ஆதர்ஷ் சொசைடி சார்பாக 32 மாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டது. கடற்படை தளம் அமைந்துள்ள இடத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி இந்த கட்டிடம் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. கட்டிடத்துக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கிய அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இது தொடர்பாக ஐகோர்ட் உத்தரவின் பேரில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது முதல்வராக இருந்த  அசோக் சவானின் மாமியாருக்கு இந்த குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அசோக் சவான் பதவியை ராஜினாமா செய்தார். அசோக் சவான் உள்பட 13 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் சவான் வழக்கு தொடர்ந்தார். முதல்வர் என்ற முறையில் தன் மீது வழக்கு தொடர்வதற்கு மாநில கவர்னரவனரின் அனுமதியை பெற வேண்டும் என வாதிட்டார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போது சவான் முதல்வராக இல்லை என சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது. இதை கோர்ட் நிராகரித்துவிட்டது. சவான் மீது வழக்கு தொடர கவர்னர் சங்கரநாரயணன் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சவான் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு கவர்னருக்கு சி.பி.ஐ. கடிதம் எழுதியது. நீண்ட நாட்களாக இந்த கடிதம் கிடப்பில் இருந்தது. இது குறித்து கடந்த மாதம் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் சவான் மீது வழக்கு தொடர தவர்னர் சங்கரநாராயணன் நேற்று முன்தினம் அனுமதி மறுத்துள்ளார். இதனால், இந்த வழக்கிலிருந்து சவான் விடுதலை ஆகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது சி.பி.ஐ.க்கு  பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது. கவர்னர் உத்தரவை எதிர்த்து கோர்ட்டில் அப்பீல் செய்யப்போவதாக சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!