முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க போலீஸ் சித்திரவதை: தேவயானி கடிதம்

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச. 20 _  சிறையில் கதறி அழுத போதும் என்னை விட வில்லை என்று அமெரிக்க போலீசின் சித்ரவதை குறித்து தூதர் தேவ யானி உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பணியாற்றும் இந்திய தூதர் தேவயானியை அமெரிக்க போலீசார் கைது செய்ததும் அத்து மீறி நடந்து கொண்ட விதமும் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அமெரிக்க போலீஸ் நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்த பின்பு தேவயானி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 

அவர் நடந்த சம்பவம் பற்றி டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை அலுவலகத்துக்கு இ மெயிலில் உருக்கமான கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது _ 

அமெரிக்க போலீசார் என்னை கைது செய்த போது தூதர் என்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. 

துணைத் தூதர் என்ற அடிப்படையில் எனக்கு தூதரக ரீதியிலான பாதுகாப்பு உள்ளதை கைது செய்த அதிகாரிகளிடம் நான் பல முறை எடுத்துக் கூறினேன். 

என்றாலும் அவர்கள் தொடர்ந்து என்னை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினார்கள். மீண்டும் மீண்டும் கை விலங்கு மாட்டினார்கள். 

ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். உடலின் அந்தரங்க பகுதிகளிலும் சோதனையிட்டனர். டி.என். ஏ. சோதனைக்ககாக மாதிரி எடுத்தனர். 

கிரிமினல் குற்றவாளிகளுடனும் போதை பொருள் கடத்தல்காரர்களுடனும் என்னை அடைத்து வைத்தனர். நான் மனம் உடைந்து பல முறை கதறி அழுதும் என்னை விட வில்லை. இவ்வாறு தேவயானி குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்