அ.தி.மு.க. எம்.பி. குமார் வெற்றி செல்லும் - ஐகோர்ட்டு தீர்ப்பு

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      அரசியல்
M P Kumar

 

சென்னை, பிப். 24 - 2009-​ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது திருச்சி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சாருபாலா தொண்டைமான் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளராக குமார் நின்றார்.   இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் குமார் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். சாருபாலா தொண்டைமான் 4 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அ.தி.மு.க. எம்.பி. குமாரின் வெற்றியை எதிர்த்து சாருபாலா தொண்டைமான் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

இது சார்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-​ திருச்சி எம்.பி. தொகுதியில் உள்ள ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் இருந்த பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்துள்ளது. வாக்காளர்களுக்கு வரம்பு மீறி செலவு செய்யப்பட்டது. எனவே குமார் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.  குமார் எம்.பி. தாக்கல் செய்த பதில் மனுவில், சாருபாலா தொண்டைமான் மனுவில் கூறப்பட்டுள்ள குற்றசாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை. கோர்ட்டு நேரத்தை வீணாக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே கோர்ட்டு செலவு தொகையை பெற்றுத்தர வேண்டும் என்று கூறி இருந்தார். 

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு nullநீதிபதி சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட nullநீதிபதி, எம்.பி. தேர்தலில் குமார் வெற்றி பெற்றது செல்லும் என்று தீர்ப்பளித்தார். வழக்கு செலவுக்கு சாருபாலா தொண்டைமான் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று nullநீதிபதி உத்தர விட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: