முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழர் பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு: ராஜபக்‌ஷே

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, டிச. 22 - இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு உள்நாட்டிலேயே தீர்வு காண வேண்டும் என அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்‌ஷே அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் அமைதியும், சமாதானமும், நிலவ இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்ணேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோர் தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராஜபக்‌ஷே இதனை தெரிவித்தார்.

தேசத்தில் சமாதானம் ஏற்பட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும் என்றார். தமிழர் பிரச்சினையில், வெளிநாட்டு தலையீட்டுக்காக காத்திருப்பதைவிட உள்நாட்டிலேயே தீர்வு காண்வதால் நாம் பெருமிதம் கொள்ளலாம். மேலும் இது எதிர்கால சந்ததியனருக்கு நாம் செய்யும் கடமையாகும் என தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மாகாணத் தேர்தல் நடைபெற்றது இலங்கை ஜனநாயகத்தின் ஒரு மைல்கல் என்றும் கூறினார்.

2014 மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கையின் மனித உரிமைகள் குறித்த விபரங்கள் விவாதத்துக்கு வரவிருக்கும் நிலையில் ராஜபக்‌ஷேவின் இந்த அழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்