முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ. தீவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: நியூசிலாந்து வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஹேமில்டன், டிச. 23 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஹேமில்டனில் நடைபெற்ற 3_வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி  பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2_ 0 என் 

ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 

மேற்கு இந்தியத் தீவுகள் அணி கேப்டன் டேரன் சம்மி தலைமையில் நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக விளையாடி வந்தது. 

நியூசிலாந்து மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. 

இதன் 3_வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹேமில்டன் நகரில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது. 5 நாள் நடக்க வேண்டி இந்தப் போட்டி 3_வது நாளுடன் முடிந்தது. 

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய மே.இ.தீவு அணி முதல் இன்னிங்சில் 367 ரன்னை எடுத்தது. பின்பு ஆடிய நியூசிலாந்து அணி 349 ரன்னை எடுத்தது. 

பின்னர் 2_வது இன்னிங்சை ஆடிய மே.இ.தீவு அணி நியூசிலாந்து பந்து வீச்சை சமா

ளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 103 ரன்னில் சுருண்டது. 

இதனால் நியூசிலாந்து அணி 2_வது இன்னிங்சில் வெற்றி பெற 122 ரன் என்ற எளிதான இலக்கை மே.இ.தீவு அணி நிர்ணயித்தது. 

3_வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்து இருந்தது. நேற்று 4_வது நாள் ஆட்டத்தை அந்த அணி தொடர்ந்தது. 

நியூசிலாந்து 2 விக்கெட்டை இழந்து 124 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்று உணவு இடைவேளைக்கு முன்பாகவே ஆட்டம் 

முடிவுக்கு வந்தது. 

நியூசிலாந்து அணி இந்த வெற்றி மூலம் 2_ 0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2_வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 73 ரன்னில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ரோஸ் டெய்லர் இந்தத் தொடரில் 3 சதம் அடித்து இருக்கிறார். முதல் டெஸ்டில் 217ரன்னும், 2_வது டெஸ்டில் 129 ரன்னும், 3_வது டெஸ்டில் 129 ரன்னும் அடித்தார். 

3 _வது டெஸ்டின் ஆட்ட நாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருது நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ரோஸ் டெய்லருக்கு அளிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago