முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவால் செயல்பாட்டை பார்த்த பின் கூறுவேன்: ஹசாரே

திங்கட்கிழமை, 23 டிசம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

மாலேகான்,டிச.24 - கெஜ்ரிவால் மற்றும் அவரது தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாட்டை பார்த்த பின்னர் என் கருத்தை கூறுவேன் என்று அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார். 

அரசியல் கட்சியை தொடங்க அண்ணா ஹசாரே மறுத்துவிட்டார். அதனால் அவரது இயக்கத்தில் இருந்து கெஜ்ரிவால் தனியாக பிரிந்து ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி உள்ளார். இந்த கட்சியானது டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் அரசு அமைக்கப்போகிறது. இதுகுறித்து கருத்து கூறும்படி ஹசாரேயிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த ஹசாரே, தற்போது நான் எதுவும் கருத்து கூறமாட்டேன். அதன் செயல்பாடுகளை பார்த்த பின்னர்தான் என் கருத்தை கூறுவேன் என்றார். அதுவும் லோக் ஆயுக்தா விஷயத்தில் கெஜ்ரிவாலும் அவரது அரசும் எப்படி செயல்படுகிறது என்பதை பார்த்த பின்னர்தான் கருத்துக்கூறுவேன் என்றார். 

காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த ஹசார, எது நல்லதோ அதை %ஜ்ரிவால் செய்யட்டும். இது சரியோ அதை அவர் செய்வார் என்றார். கெஜ்ரிவால் செய்வது அறவழியிலானதா என்று நிருபர்கள் கேட்டதற்கு அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது எனக்கு தெரியாது என்று ஹசாரே சற்றென்று பதில் அளித்தார். 

லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி ஹசாரே மாலேகானில் உண்ணாவிரதம் இருந்தபோது கெஜ்ரிவால் கட்சியை சேர்ந்த கோபால் ராய், அங்கு சென்று வி.கே. சிங்கிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். உடனே கோபால் ராயை மேடையை மட்டுமல்லாது ஊரை விட்டே வெளியேறுமாறு உத்தரவிட்டார். இதனால் கெஜ்ரிவால் கட்சியினருக்கும் ஹசாரேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு, உதவி, பாதுகாப்பு கொடுத்த எம்.பி.க்கள், அதிகாரிகள் , போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு ஹசாரே நன்றியை தெரிவித்துக்கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்