முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணவீக்கம் தவிர்க்க முடியாதது - பிரணாப்

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி, பிப்.24 -  வளரும் பொருளாதாரத்தில் பணவீக்கம் தவிர்க்க முடியாதது. பணவீக்கத்தின் தாக்கம் ஏழைகளை பாதிக்காமல் இருக்க வேண்டுமானால் பொது விநியோக முறையை பலப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.  கேள்வி நேரத்தின்போது பணவீக்கத்தை குறைக்க அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், வளரும் பொருளாதார சூழலில் பணவீக்கம் இருந்தே தீரும். அதன் தாக்கமாக விலைவாசி உயர்வும் இருக்கும். இது உலகம் முழுவதிலும் உள்ள நிலைமை என்றார் அவர். பணவீக்கமும், விலைவாசி உயர்வும் ஏழை மக்களை பாதிக்காமல் இருக்கவேண்டுமானால் பொது விநியோக முறையை நாம் பலப்படுத்த வேண்டும். இதை மாநிலங்கள்தான் செய்ய வேண்டும். மத்திய அரசு மட்டுமே எடுக்கக்கூடிய நடவடிக்கை இது இல்லை.  கடந்த ஆண்டு முதல்வர்கள் மாநாட்டிற்கு பிறகு பொது விநியோக முறையை சீரமைக்கும் வழிகளைக் கண்டறிய சில முதல்வர்களைக் கொண்ட  குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இன்னும் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. பொது விநியோக முறையை செயல்படுத்துவது மாநில்களின் கடமையாகும். டெல்லியில் இருந்துகொண்டு மத்திய அரசு எப்போதும் கண்காணித்துக்கொண்டு இருக்க முடியாது. பணவீக்கத்தின் தாக்கம் பொருளாதாரத்தில் உண்டு என்றாலும் அது ஏழைகளைப் பாதிக்காமல் அவர்களை பாதுகாக்க வேண்டும். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது அரசின் கடமை  என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்