முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

14 ஆண்டுக்கு பின் இந்திய-பாக். ராணுவ உயர் மட்ட பேச்சு

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச. 25 - மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் ராணுவச் செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குநர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை 14 ஆண்டுகளுக்குப் பிறகு, வாகா எல்லையில் இன்று தொடங்கியது. 

எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது, பதற்றத்தை தணிப்பது, எல்லை ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தாமல் இருப்பது ஆகியன தொடர்பாக இந்த சந்திப்பின் போது ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்திய தரப்பில் லெப்டிணண்ட் ஜெனரல் வினோத் பாட்டியாவும், பாகிஸ்தான் தரப்பில் மேஜர் ஜெனரல் ஆமீர் ரியாசும் கலந்து கொள்கின்றனர். இவர்கள் தவிர இரு தரப்பிலும் தலா 3 லெப்டிணண்ட் கர்னல்களும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். 

இந்த சந்திப்பு குறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இரு நாடுகளின் ராணுவச் செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குநர்களுக்கு இடையேயான சந்திப்பிற்கான முடிவு அரசியல் உயர் மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

14 ஆண்டுகளுக்குப் பிறகு: 

கடந்த 1999-ஆம் ஆண்டு கார்கில் போர் முடிவுக்குப் பின்னர் இரு தரப்பு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பிறகு இப்பொழுது தான் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த சந்திப்பின் போது, எல்லை ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தக் கூடாது என்பதை இந்திய தரப்பில் கடுமையாக வலியுறுத்தப்படும் என தெரிகிறது. 

மூன்று மாதங்களுக்கு முன்னர், இந்தியா-பாகிஸ்தான் பிரதமர்கள் சந்தித்த போது, எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண ராணுவச் செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குநர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்