ஸ்பெக்ட்ரம் ஊழல் - தயாளு அம்மாவை சேர்க்கக்கோரி வழக்கு

Kani-Dayalu

 

புதுடெல்லி,மே.21 - ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு குற்றப்பத்திரிகையில் தி.மு.க.தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், அனில் அம்பானி, ரத்தன் டாடா ஆகியோர்களை சேர்க்கக்கோரி டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. இரண்டு முறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல் குற்றப்பத்திரிகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதனையடுத்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கொடுத்த டி.பி. ரியால்டி புரமோட்டர் பல்வா,ஆ.ராசாவின் தனி செயலாளராக இருந்த சந்தோலியா, மத்திய தொலைதொடர்புத்துறை முன்னஆள் செயலாளர் சித்தார்த்த பெகுரா, (இவர் நீரா ராடியாவின் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக பணியாற்றினார்) உள்பட 5 பேர் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். ஸ்பெக்ட்ரம் ஊழலில் இரண்டாவது முறையாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் கலைஞர் டி.வி.யில் பங்குதாரரும், கருணாநிதியின் மகள் கனிமொழி, கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களும் கைது செய்யப்பட்டுள்ளர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டல் லாபம் அடைந்ததாக கூறப்படும் அனில் அம்பானி, ரத்தன் டாடா மற்றும் கலைஞர் டி.வி.பங்குதாரராக இருக்கும் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆகியோர்களிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. ஆனால் இவர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படவில்லை. அதனால் இனிமேல் 3-வது முறையாக தாக்கல் செய்யப்படவிருக்கும் துணை குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாள், ரத்தன் டாடா, அனில் அம்பானி உள்பட 4 பேர்களை சேர்க்கக்கோரி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வருகின்ற 30-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ