முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா, ராகுலை எதிர்த்து பிரச்சாரம்: ராம்தேவ்

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2013      ஊழல்
Image Unavailable

  

புதுடெல்லி, டிச.25 - சோனியா, ராகுலை எதிர்த்து அமேதி, ரேபரேலி தொகுதிகளில் பிரச்சாரம் செய்வேன் என்று யோகா குரு ராம்தேவ் கூறினார். டெல்லியில் அவர் நிருபர் களிடம்  கூறியதாவது: 

அரசியல் கட்சியில் சேர வேண்டும் என்ற ஆசை எனக்குக் கிடையாது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. நரேந்திரமோடி பிரதமர் ஆக வேண்டும்  என்று நான் விரும்புகிறேன். அவருக்காக நான் பிரச்சாரம் செய்வேன், பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறாது. சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா அரியானா மாநிலத்தில் நில அபகரிப்பு செய்து பல ஆயிரம் கோடி ருபாயை முறைகேடாக சம்பாதித்துள்ளார். சோனியா, ராகுலை மக்கள் தோற்கடிக்க வேண்டும். சோனியா, ராகுலை எதிர்த்து அமேதி, ரேபரேலி தொகுதிகளில் பிரச்சாரம் செய்வேன் என்று யோகா குரு ராம்தேவ் கூறினார். 

                   

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!