முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஷாரப்பை கொல்ல முயன்ற சதி முறியடிப்பு

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், டிச.26 - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பை கொல்ல முயன்ற சதி முறியடிக்கப்பட்டது. முஷாரப் கொலை வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் இஸ்லாமாபாத் அருகிலுள்ள அவரது பண்ணை வீட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2007_ம் ஆண்டு நீதிபதிகளை கைது செய்த விவகாரத்தில்  இவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க  3 நீதிபதிகள் கொண்ட சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த இருந்தனர். இதற்காக கோர்ட்டுக்கு செல்லும் வழியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ரோடுகள் ஓரம் குண்டுகள் பதிக்கப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தப்பட்டது. 

அவரது பண்ணை வீட்டின் அருகே உள்ள புதரில் மறைத்து வைத்திருந்த 5 கிலோ எடையுள்ள வெடிபொருள்கள் மற்றும் 5 மீட்டர் வயர் போன்றவை இருந்தன. கை துப்பாக்கிகள் 2 மற்றும் 15 துப்பாக்கி குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. இதன்மூலம் தீவிரவாதிகள் முஷாரப்பை கொலை செய்ய முயன்ற முயற்சி முறியடிக்க ப்பட்டது. இதை முஷாரப்பின் வக்கீல் அன்வர்மன்சூர்கான் தெரிவித்தார்.

பாதுகாப்பு காரணங்கள் கருதி முஷாரப்பை கோர்ட்டில் நேரில் ஆஜர் செய்ய இயலவில்லை என்றும் கூறினார். இதை நீதிபதி பைசல் அசரப் ஏற்றுக்கொண்டார். இருந்தாலும் இந்த வழக்கில் ஜாமீன் வழங்க முடியாது . எனவே வரும் 1_ம் தேதிக்கு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார். 

                        

 

 

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago