முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசாவுக்கு நரேந்திர மோடி விண்ணப்பிக்கலாம்: அமெரிக்கா

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், டிச. 2 9 - பாஜக பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடிக்கு விசா வழங்குவது தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவின் கொள்கை மாறவில்லை. எனினும் அவர் விசா கேட்டு விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப் பம் அமெரிக்க சட்டதிட்டப்படி ஆய்வுக்கு உட்படுத்தப் படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்  கூறியதாவது: அமெரிக்காவின் விசா கொள்கையில் மாற்றம் ஏதும் இல்லை. நரேந்திர மோடி விசா கேட்டு விண்ணப்பிக்கலாம் என்பதே அமெரிக்காவின் நிலையாகும். மற்ற விண்ணப்பதாரர்களின் மனு மீது எப்படியோ அதுபோலவே மோடியின் மனுவும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

அமெரிக்க சட்டதிட்டத்துக்கு உள்பட்டு இந்த ஆய்வு இருக்கும். அதன் இறுதி முடிவு எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க இயலாது என்றார் அந்த அதிகாரி.

உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு, 2002ல் குஜராத்தில் நிகழ்ந்த வகுப்பு கலவரத்தில் மோடிக்கு எதிரான புகார்கள் பற்றி விசாரித்தது. அவருக்கு கலவரத்தில் தொடர்பு உள்ளதை நிரூபிக்கும் ஆதாரங்கள் இல்லை என தெரிவித்து நற்சான்று கொடுத் துள்ளது. இதைச் சுட்டிக்காட்டி கேட்டதற்கு இந்த விளக்கத்தை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

2005ம் ஆண்டிலும் மோடிக்கு விசா மறுக்கப்பட்டது. முன்னதாக அவருக்கு வழங்கப்பட்டிருந்த பி1 பி2 விசாவையும் அமெரிக்கா ரத்து செய்தது. மதச் சுதந்திரத்தை மீறும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடும் அல்லது அதற்கு பொறுப்பானவர்களாக இருக்கும் வெளி நாட்டு ஆட்சியாளர்கள், அதிகாரிகள் விசா பெற தகுதியில்லை. குடியேற் றம் மற்றும் தேசிய சட்டத்தில் உள்ள பிரிவு இத்தகைய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதன்படியே, மோடிக்கு விசா தராமல் மறுப்பது என புஷ் நிர்வாகம் முடிவை எடுத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்