முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணல் திருட்டு: தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சனிக்கிழமை, 21 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

திண்டுக்கல், மே.21 - மணல் திருட்டில் ஈடுபடும் தி.மு.க. பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகிலுள்ள கொசவபட்டி, நல்லமணார்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வரட்டாறு, சந்தானவர்த்தினி ஆற்றுப்படுகைகளில் தி.மு.க.வைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து மணல் அள்ளி வருகின்றனர். கடந்த வாரம் சந்தானவர்த்தினி ஆற்றுப் படுகையில் மணல் அள்ளிக்கொண்டிருந்த தி.மு.க. பிரமுகர்களையும், 2 லாரிகளையும் பிடித்து அப்பகுதி பொதுமக்களே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து பல வருடங்களாக மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு பல புகார் மனுக்கள் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருவதுடன் இதுகுறித்து புகார் தெரிவிப்பவர்களை கொலைமிரட்டல் விடுத்தும் வருகின்றனர்.

எனவே மேற்கண்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மணல் திருட்டைத் தடுக்க வேண்டும், இப்பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள் 5 லாரிகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் வள்ளலார் உறுதியளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்