முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெல்போர்ன் டெஸ்ட்: ஆஸ்தி., வெற்றி பெற 231 ரன் இலக்கு

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன், டிச. 29 - ஆஷஸ் தொடர் 4_வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 231 ரன்னை இலக்காக இங்கிலாந்து அணி வைத்துள்ளது. 

இங்கிலாந்து அணி கேப்டன் அலிஸ்டார் கூக் தலைமையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்ட

ன் மைக்கேல் கிளார்க் தலைமையிலான அ

ணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. இதன் 4 _வது போட்டி மெல்போர்ன் நகரில் கடந்த 3 நாளாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங்கை துவக்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 255 ரன்னை எடுத்து ஆட்டம் இழந்தது. பின்பு ஆஸ்திரேலிய அணி ஆடியது. 

ஆஸ்திரேலிய அணி 2_ம் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன் எடுத்து இருந்தது. 

3_ம் நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 204 ரன்னை எடுத்து ஆல் அவுட் ஆனது. கடைசி விக்கெட்டாக பிராட் ஹாடின்(65 ரன்) அவுட் ஆனார். 

51 ரன் முன்னிலையுடன் 2_வது இன்னிங்சை இங்கிலாந்து விளையாடியது. தொடக்க வீரர்கள் கூக் 51 ரன்னிலும், கார்ப்பெரி 12 ரன்னிலும் அவுட் ஆனார்கள். 

ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சில் விக்கெட்டுகள் சரிந்தன. ஜோ ரூட் 12 ரன்

னிலும், ஸ்டோக்ஸ் 19 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 21 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 

இதில் இயான் பெல், பிரஸ்னன், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் பனேசர் ஆகிய 4 வீரர்கள்

டக் அவுட் ஆகியது குறிப்பிடத்தக்கது. 

நட்சத்திர வீரரான கெவின் பீட்டர்சன் 49 ரன் எடுத்தார். 

முடிவில் இங்கிலாந்து அணி 2 _ வது இன்னிங்சில் 179 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸி. சார்பில் முன்னணி சுழற் பந்து வீரரான நாதன் லியான் 5 விக்கெட் வீழ்த்தினார். ஜான்சன் 3 விக்கெட் கைப்பற்றினார். 

ஆஸ்திரேலிய அணி 2_வது இன்னிங்சில் வெற்றி பெற 231 ரன்னை இலக்காக இங்கிலாந்து அணி வைத்துள்ளது. 

ஆஸ்திரேலிய அணி இலக்கை நோக்கி 2_வது இன்னிங்சை ஆடி வருகிறது. இதுவரை நடந்துள்ள 3 டெஸ்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்