முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலைப் புலிகளின் ஆயுத முகவருக்கு அமெரிக்கா தடை

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், டிச.30 - விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயற்சித்ததாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்தவர், தண்டனைக்கு பின்பு தாய் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவர் மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் பல்ராஜ் நாயுடு ராகவன் (51). சிங்கப்பூரில் வசித்து வந்த இவர், விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுத முகவராக செயல்பட்டுள்ளார்.இவர், கடந்த 2006-ம் ஆண்டு 9 லட்சம் அமெரிக்க டாலர் விலை மதிப்புள்ள கையெறி குண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை அமெரிக்காவில் வாங்க முயன்றார். இந்த விவகாரத்தில் அவருடன் கூட்டுச் சதியில் ஈடுபட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த ஹனிபா ஓஸ்மான் (62) என்பவர், அந்த ஆயுதங்களை பால்டிமோரில் வைத்து சோதனை செய்து பார்த்தார். பின்னர், இலங்கைக்கு அனுப்புவதற்காக 28 டன் எடை ஆயுதங்களும், வெடிமருந்துகளும் குவாம் தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இந்நிலையில் பல்ராஜ் நாயுடு ராகவன், ஹனிபா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 2 பேர், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் ஆகியோர் கைது செய்யப் பட்டனர்.இதில் ஹனிபா 37 மாத சிறைத்தண்டனையை நிறைவு செய்த பின்பு ஏற்கெனவே சிங்கப்பூ ருக்கு திரும்பி வந்துவிட்டார்.

4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற பல்ராஜ் நாயுடு ராகவன், சிறைத் தண்டனை முடிவடைந்ததை அடுத்து டிசம்பர் 16-ம் தேதி சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அமெரிக்க சுங்கத்துறை அதிகாரி சைமோனா எல்.புளோரஸ் கூறுகையில், “பல்ராஜ் நாயுடு ராகவன் மீண்டும் அமெரிக்காவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்