முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளையாட்டு கண்ணோட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, டிச. 30 - இந்த ஆண்டின் துவக்கத்தில் (ஜனவரி மாதம் ) சென்னையில் நடைபெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியா வின் ஜான்கோ டிப்சரோவிச் பட்டம் வென்றார். இரட்டையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா _ பிரான்சின் பெனாய்ட்பேர் ஜோடி பட்டம் வென்றது. 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில்  செர்பிய வீரர் நோவக் ஜோகோவிக் பட்டம் வென்றார். மகளிர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா பட்டம் வென்றார். 

பிப்ரவரி மாதம் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 114 ரன் கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது.  இது ஆஸ்திரேலிய மகளிர் அணி பெற்ற 6_வது உலகக் கோப்பையாகும். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை (மார்ச் மாதம் ) இந்திய அணி 4_ 0 என்ற கணக்கில் வென்றது. அந்த அணியை 4_ 0 என்ற கணக்கில் வெல்வது இதுவே முதல் முறை. 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் (மே மாதம்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இன்டியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதைத் தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக சச்சின் அறிவித்தார். 

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பிரெஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் இப்பட்டத்தை 2_வது முறையாக கைப்பற்றினார். 

தாய்லாந்தில் நடைபெற்ற கிராண்ட் ப்ரீ பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் பட்டம் வென்றார். இந்திய வீரர் ஒருவர் வெளிநாடுகளில் நடைபெற்ற கிராண்ட் ப்ரீ  போட்டியில் பட்டம் வென்றத இதுவே முதன்முறை. 

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே பட்டம் வென்றார். இதனால் 77 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பட்டத்தை வென்று ரசிகர்களின் நீண்ட நாள் தாக்கத்தை தணித்தார் முர்ரே. 

உலக கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த மாஸ்டர் பிளாஸ்டர் டெண்டுல்கர் தனது 200 _வது டெஸ்ட் போட்டியுடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கும் அவர் தேர்வு செய்யப்பட்டார். இவ்விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட முதல் விளையாட்டு வீரர் சச்சின் தான். 

சென்னையில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி புதிய சாம்பியனாக உருவெடுத்தார் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சென். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 2_ 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை 3_0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்று சாதனை படைத்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்