முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு குழந்தை திட்டத்தை தளர்த்தி ஒப்புதல் அளித்தது சீனா

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங்,டிச.30 - ஒரு குழந்தைக் கொள்கை என்ற கடுமையான குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை தளர்த்தி சீனா ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் சகோதர, சகோதரிகளோ இல்லாத தம்பதியினரோ, சிறுபான்மை இனத்தவராகவோ இருந்தால் மட்டுமே இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் அந்த தம்பதியினரும் மற்றொரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. சீனாவின் நாடாளு மன்ற நிலைக்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள மக்கள் தொகை விகிதத்தை கருத்தில் கொண்டுகுடும்பக் கட்டுப்பாடு விதிகளை தளர்த்த வேண்டும் அல்லது இது தொடர்பாக ஒரு சிறப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் அந்த்த் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தால் 1990_ம் ஆண்டில் பிறப்பு விகிதம் 1.5 முதல் 1.6 சதவிகிதம் வரை மட்டுமே  உள்ளது. தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அத்துடன் பிறந்த ஒரு குழந்தையையும், நோய் மற்றும் விபத்துக்களில் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் இழந்து விடுகின்றனர். சிலருக்கு ஊனத்துடனோ அல்லது நோய்வாய்ப் பட்டோ குழந்கை பிறக்கிறது.இதை எல்லாம் கதருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை சீனா எடுத்துள்ளது.

           

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்