முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஓபன் தொடக்கம்: இந்திய ஜோடி முன்னேற்றம்

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, டிச.31 - சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. 

இதில் இந்திய ஜோடி முன்னேற்றம் அடைந்தது. நேற்று தொடங்கிய சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்திய நட்சத்திர வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் தனது முதல் சுற்றில் தகுதிநிலை வீரரை சந்தித்து வெற்றி பெற்றார்.

தமிழக அரசின் ஆதரவுடன் ஏர்செல் 19_வது சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நேற்று (திங்கட்கிழமை) முதல் 5_ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.2 கோடியாகும். இதையொட்டி முன்னணி வீரர்கள் சென்னை வந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போட்டியில் யார்_யாருடன் மோதுவது என்பது குலுக்கல் (டிரா) மூலம் நேற்று முன்தினம் முடிவு செய்யப்பட்டது. 

குலுக்கல் மூலம் நிர்ணயிக்கப்பட்ட போட்டி அட்டவணைப்படி இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் தனது முதல் ரவுண்டில், தகுதி நிலை வீரரை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். அடுத்த சுற்றில் முன்னணி வீரர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மார்செல் கிரானோலர்சை சந்திக்கிறார். 

இங்கு 6 முறை இரட்டையர் மகுடம் சூடியவரான இந்தியாவின் லியாண்டர் பெயஸ், இத்தாலியின் பாபியோ போக்னினியுடன் கைகோர்த்து முதல் சுற்றில் குரோஷியாவின் மேட் பவிச்_ மரின் டிரகன்ஜாவுடன் ஆன ஜோடியை வீழ்த்தினார்.

தகுதி சுற்றுப் போட்டியில் நேற்று ராம்குமார் ராமநாதன் தகுதி நிலை வீரர் நார்பெர்ட் கோம்பாஸை வெற்றி கொண்டு அடுத்து சுற்றுக்கு முன்னேறினார். 

இதேபோல இரட்டையர் பிரிவில் பாப்லோ காரெனோ பஸ்டா (ஸ்பெயின்), அல்பர்ட் ரமோஸ் (ஸ்பெயின்)_ ஜோடியை எதிர்கொண்ட கரென் கச்சனோவ் (ரஷியா)_ சகெத் மைனெனி (இந்தியா) ஜோடி வெற்றி பெற்றது. இது இந்தியாவின்சகெத்மைனெனிக்கு ஒரு மைக்கல் போட்டியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்