முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளுக்கான வில்வித்தை - இந்தியாவுக்கு 4 பதக்கம்

சனிக்கிழமை, 21 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மே.21 - பாங்காக்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய வில்வித்தை போட்டியில் இந்திய அணி வீரர்கள் 4 வெண்கல பதக்கங்களை வென்றனர். இவர்கள் சென்னையில் பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. முதலாவது ஆசிய பாரா ஆர்சரி(மாற்றுத்திறனாளிகளுக்கான வில்வித்தை) போட்டி பாங்காக் நகரில் கடந்த 10ம் தேதி துவங்கி 17ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினருக்கான பயிற்சி முகாம் சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 

ஆசிய போட்டியில் சைனீஸ் தைப்பே, ஹாங்காங், ஈராக், இத்தாலி, ஜப்பான், கொரியா, மலேசியா,தாய்லாந்து உள்ளிட்ட முக்கிய அணிகள் பங்கேற்றன.

7 பேர் கொண்ட இந்திய அணியினர், தமிழ்நாடு பாரா ஆர்சரி சங்க செயலாளர் எஸ்.என்.உதயகுமாரை பயிற்சியாளராகவும், ஜெ.யுவராஜை பிட்னஸ் பயிற்சியாளராகவும் கொண்டு பங்கேற்றனர். இந்திய அணியில் விலாஸ் திவானே 2 வெண்க பதக்கங்களையும், சந்தீப் நரதா கவாய் ஒரு வெண்கல பதக்கமும் வென்றனர். இவர்கள் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள். கோவாவைச் சேர்ந்த முங்கேஷ் குட்டிகார் ஒரு வெண்கல பதக்கம் பெற்றார். 

பாங்காங்கிலிருந்து சென்னை திரும்பிய இந்திய அணியினருக்கு சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தமிழ்நாடு பாரா ஆர்ச்சரி சங்க தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், துணை தலைவர் எம்.பன்னீர்செல்வம், செயலாளர் எஸ்.என்.உதயகுமார், இணை செயலாளர் அப்ரார் அமகது, கோல்டன் ஜார்ஜ்  ஆகியோர் இந்திய அணியினரை பாராட்டினர்.

ஆசிய போட்டியைத்தொடர்ந்து ஜூலை 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை இத்தாலியில் உள்ள டொரினோ நகரில் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் இப்போது வெண்கல பதக்கம் வென்றுள்ள விலாஸ் தவானே, சந்தீப் நராதா கவாய், முங்கேஷ் குட்டிகர் ஆகியோரோடு, அமோல், ரன்வீர் சிங், சர்மா ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்