முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டர்பன் டெஸ்டில் தோல்வி ஏன்? கேப்டன் தோனி விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

டர்பன், ஜன. 1 - தெ.ஆ. வுக்கு எதிராக டர்பனில் நடந்த          2 _வது டெஸ்டில் நடுவரின் மோசமான தீர்ப்பு மற்றும் பேட்ஸ்மேன்களின் மோசமான ஷாட் ஆகியவையே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்று கேப்டன் தோனி தெரிவித்து இருக்கிறார். 

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு டர்பனில் நடந்தது. 

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 334 ரன்னும், தென் ஆப்பிரிக்கா 500 ரன்களும் குவித்தன. 

இதையடுத்து 2_வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி கடைசி நாள் ஆட்டத்தில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரகானே 96 ரன் எடுத்தார். 

தென் ஆப்பிரிக்க தரப்பில் ராபின் பீட்டர்சன் 4, ஸ்டெயின் , பிலாண்டர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். 

அடுத்து 58 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2_வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 11.4 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 59 ரன் எடுத்து வெற்றி  பெற்றது. 

தென்ஆப்பிரிக்கா தரப்பில் அல்விரோ பீட்டர்சன் 31 ரன்னும், கேப்டன் கிரீம் ஸ்மித் 27 ரன்னும் எடுத்தனர். 

இந்த 2_வது டெஸ்டில்10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தெ. ஆ. 1_ 0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. 

இந்தப் போட்டியின் 2 இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 9 விக்கெட் வீழ்த்திய ஸ்டெயின் ஆட்டநாயகனாகவும், டிவில்லியர்ஸ் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்திய அணியின் 2_வது இன்னிங்சில் ரகானே மற்றும் புஜாரா இருவர் மட்டும் தாக்குப் பிடித்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். 

டர்பன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து கேப்டன் தோனி நிருபர்களிடம் தெரிவித்ததாவது _ 

5 _வது நாளில் முதல் பகுதி ஆட்டம் முக்கியமானதாக அமைந்தது. ஆனால் அதை நாங்கள் சரியாக தொடங்கவில்லை. நடுவரின் மோசமான தீர்ப்புகள், கடினமான முடிவுகள், மோசமான ஷாட்டுகள் தோல்வியில் கொண்டு போய் விட்டன. 

ஒட்டு மொத்தத்தில் இந்த இளம் அணியின் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர். 

அவர்கள் இந்தத் தொடரில் இருந்து நிறைய விஷயங்களை கற்று இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

இந்தப் போட்டி குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித் கூறியதாவது _ காலிசுக் காக இந்தப் போட்டியில் வெல்ல வேண்டும் என்று விரும்பினோம். அதனை கடினமாக உழைத்து செய்துள்ளோம். அவரது இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago