முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

புதன்கிழமை, 1 ஜனவரி 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜன.2 - ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதாவை கடந்த 2011-ம் ஆண்டு கொண்டு வந்தது. ஆனால் அந்த மசோதாவலுவாக இல்லை என்று கடும் எதிர்ப்புக் கிளம்பிளது. இதைத் தொடர்ந்து லோக்பால் சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. திருத்தப்பட்ட லோக்பால் மசோதா கடந்த மாதம் 17-ம் தேதி பாரளுமன்ற மக்களவையிலும் அந்த சட்டம் நிறைவேறியது. இதையடுத்து அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து பாராளுமன்ற சபா நாயகர் மீராகுமார் கையெழுத்திட்டார். அதன் பிறகு அந்த மசோதாவை பாராளுமன்ற செயலகம் சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பியது. அவர்களும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த நிலையில் லோக்பால் மசோதாவை மத்திய அரசு நேற்று முன் தினம் இரவு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்தது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தெரிவித்து பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டுள்ளார்.

 ஜனாதிபதி கையெழுத்திட்டதால்,அது

 அரசிதழில் வெளிடப்படும். இதைத் தொடர்ந்து நாடெங்கும் லோக்பால் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துவிடும். அதன் பிறகு மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை உருவாக்கும் முயற்சிகளை மத்திய அரசு தீவிரப்படுத்த உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்