முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

48 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம் மாற்றம்

சனிக்கிழமை, 21 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.21 - தமிழக அரசின் முக்கி 48 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது பற்றிய அறிவிப்பை தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி வெளியிடுள்ளார். அதன் விபரம் வருமாறு:-

அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் கூடுதல் செயலர் மற்றும் இயக்குனராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் அரசின் கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொல்பொருள் மற்றும் அருங்காட்யகத்துறையின் முதன்மை செயலராக இருந்த டி.எஸ்.ஸ்ரீதர் அரசின் முதன் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் துறை முதன் செயலராக இருந்த என்.சுந்தரதேவன் அரசு தொழிற்துறையின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்துதுறைசெயலர் ரமேராம் மிஷ்ரா தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசின் நிர்வாகத்துறையின் முதன்மை செயலாளராக இருந்த ஆர்.கண்ணன் உயர்கல்வி துறையின் முதன் செயலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகத்தின் முதன்மை செயலர் மற்றும் தலைவராக இருநத் என்.எஸ்.பழனியப்பன் கிராமப்புற மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் முதன்மை செயலராக இருந்த சாந்தினிகபூர் இளைஞர் நல்வாழ்வு மற்றும் விளையாட்டு துறை முதன்மைசெயலராகி உள்ளார்.

வருவாய் முதன்மை செயலர் வி.கே.ஜெயக்கொடி சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை முதன்மை செயலராகி உள்ளார்.

ஜவுளி மற்றும் கதர் துறை முதன்மை செயலாராக இருத ஆர்.ராஜகோபால் அரசின் வருவாய் துறை முதன்மை செயலராகி இருக்கிறார்.

தொழிற்துறை முதன்மை செயலராக இருந்த ராஜீவ்ரஞ்சன் சர்க்கரைத்துறை முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சர்க்கரை நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் அவர் செயல்படுவார்.

மாநில திட்ட கமிஷனின் முதன்மை செயலராக இருந்த கே.அருள்மொழி விவசாயத்துறையின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வணிகவரித்துறை முதன்மை செயலர் முகமது நசிமுதீன் போக்குவரத்து துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசின் 4-வது மாநில நிதிநிறுவனத்தின் தலைவராக இருந்த கே.பணிந்தர ரெட்டி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு செயலராரகியுள்ளார்.

நில சீர்த்திருத்தங்களுக்கான தலைவராக இருந்த சி.முத்துகுமாரசாமி ஜவுளி மற்றும் கதர் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுப்பணித்துறையில் திட்ட இயக்குனராக இருந்த விபுநாயர், பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை வளர்ச்சி துறைக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் மறுவாழ்வு துறையின் செயலராக இருந்த எஸ்.கருத்தையா பாண்டியன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோக துறைக்கு செயலராகி உள்ளார்.

சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத்துறை செயலராக இருந்த வி.இறையன்பு அரசின் அலுவல் மற்றும் நிர்வாக சீர்திருத்த (பயிற்சி) துறைக்கு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாற்றத்திறனாளிகள் துறைக்கு செயலராக இருந்த எஸ்.எஸ்.ஜவகர் அருங்காட்சியகங்களின் கமிஷனராகி உள்ளார்.

சென்னை மாநகர வளர்ச்சி குழுமத்தின் கூடுதல் செயலராக இருந்த சூசன் மேத்யூ தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் வெளியீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த ஏ.எஸ்.ஜீவரத்தினம் ஆதிதிராவிட மற்றும் மலைவாழ் மக்கள் நல்வாழ்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுக துறையின் செயலராக இருந்த ஜி.சந்தானம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நல்வாழ்வு துறைக்கு செயலராகநியமிக்கப்பட்டுள்ளார்.

எலக்ட்ரானிக்ஸ் துறை செயலராக இருந்த சந்தோஷ்பாபு தகவல் தொழிநுட்ப துறைக்கு செயலராகி உள்ளார்.

தமிழ்நாடு மருத்துவ கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த சிவதாஸ் மீனா சிறப்பு செயலாக்க திட்டத்துறையின் செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த சுனில் பலிவால் வணிக வரித்துறை மற்றும் பதிவு துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த சுகன்தீப் சிங் பேடி விலங்கியல், பண்ணை மற்றும் மீன் வளத்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த எம்.சாயிகுமார் பொதுப்பணித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அச்சு மற்றும் காகித கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த டி.கே.ராமச்சந்திரன் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுக துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முதன்மை செயலராக இருந்த சந்திர பிரகாஷ் சிங்க தொல்லியல் துறை செயலலாகி இருக்கிறார்.

முன்னாள் துணை முதல்வரின் முதன் செயலராக இருந்த அசோக் பாப்கரே சமூக பாதுகாப்பிற்கான துறைக்கு முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வரின் முதன்மை செயலராக இருந்த எஸ்.கே.பிரபாகர் சுனாமி மறுவாழ்வு துறைக்கான சிறப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வரின் மற்றொரு செயலராக இருத கே.ரகுபதி கிராமப்புற வளர்சச்இ (பயிற்சி) துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

இந்து அறநிலையத்துறையின் தலைவராக இருந்த பி.ஆர்.சம்பத் மாற்று திறனாளிகளுக்கான துறையின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவல் தொழில் நுட்ப துறை முதன்மை செயலராக இருந்த பி.டபிள்யூசி. தாவிதர் தமிழ்நாடு உப்பு கழகத்தின் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

விவசாயத்துறையின் தலைவராக இருந்த அடுல் ஆனந்த் தமிழ்நாடு மின்னணு கழகத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இயக்குனராகவும், முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் செயல்படுவார்.

தேசிய புயல் அபாய திட்டத்தின் இயக்குனராக டெல்லியில் செயலாற்றி வந்த சி.வி.சங்கர் தமிழ்நாடு குடிநீர் மற்றும் வாரிய தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர் கல்வித்துறையின் முதன்மை செயலராக இருந்த கே.கணேசன் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் கூட்டமைப்பு வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மை செயலராக இருந்த கே.அலாவூதீன் தமிழ்நாடு சிறு தொழில் நிறுவன கழகத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதன்மை செயலராக இருந்த எம்.குற்றாலிங்கம் நிர்வாக துறையின் முதன்மைசெயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்