முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டர்சனின் சாதனை ஒரு நாள் முறியடிக்கப்படும்: அப்ரிடி

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

கராச்சி , ஜன. 1 -நியூசிலாந்து வீரர் கோரே ஆண்டர்சனின் சாதனையும் ஒரு நாள் முறியடிக்கப்படும் என்று பாகிஸ்தான் அணியின் மூத்த வீரரான சாகித் அப்ரிடி தெரிவித்து இருக்கிறார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சாகித் அப்ரிடி 1996 ல் இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார். 

அவருடைய 17 ஆண்டுகால சாதனையை நேற்று முன் தினம் நடந்த மே.இ. தீவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் கோரே ஆண்டர்சன் முறியடித்தார். 

நியூசிலாந்து அணியின் இளம் வீரரான கோரே ஆண்டர்சன் 36 பந்தில் சதம் அடித்து இந்த புதிய சாதனையை படைத்து இருக்கிறார். 

நியூசிலாந்து வீரரின் இந்த சாதனை குறித்து பாக். வீரர் அப்ரிடிநிருபர்களிடம் தெரிவித்ததாவது _  ஆண்டர்சனின் பெயரை இதற்கு முன்பு நான் கேள்வி பட்டதில்லை. 

எனது உறவினர் ஒருவர் நேற்று முன் தினம் வந்து உங்களது சாதனை முறியடிக்கப்பட்டு விட்டதாக கூறினார். புத்தாண்டில் எனக்கு வந்த முதல் செய்தி இது தான். 

ஆனால் இது மிகப் பெரிய சாதனை என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும். ஆண்டர்சன் எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவர். 

36 பந்துகளில் சதம் அடிப்பதற்கு கடுமையான முயற்சி தேவை. சாதனைகள் எல்லாமே முறியடிக்கப்படக் கூடியவை தான். எனது சாதனையும் ஒரு நாள் தகர்க்கப்படும் என்பது தெரியும். 

ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வரை எனது சாதனை தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்று விரும்பினேன். 

இனி சாதனை பட்டியலில் ஆண்டர்சன் பெயர் தான் வரும். 20 _20 கிரிக்கெட்டின் அவதாரத்தால் எதிர்காலத்தில் இந்த சாதனைக்கும் ஒரு நாள் முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன். 

எனது சாதனையை கெய்ல் அல்லது டேவிட் வார்னர் முறியடிப்பார்கள் என  எதிர்பார்த்தேன். ஆனால் புதிய வீரர் ஒருவர் இச்சாதனையை முடிவுக்கு கொண்டு வருவார் என்று ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. 

இச்சாதனையை விரைவில் ஒரு பாகிஸ்தான் வீரர் முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அப்ரிடி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்