முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலாத் துறையில் தமிழகம் முதன்மை - புத்தி சந்திரன்

சனிக்கிழமை, 21 மே 2011      அரசியல்
Image Unavailable

ஊட்டி, மே.21 - 5 ஆண்டுகளில் சுற்றுலாத்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் கூறினார்.ஊட்டியிலுள்ள உலகப்புகழ் பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் 115-வது மலர்காட்சி நேற்று துவங்கியது. இவ்விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் தலைமை தாங்கி பேசியதாவது: 

விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் பேசுகையில், ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் 115-வது மலர்காட்சி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மலர்காட்சியையொட்டி போட்டியாளர்களுக்கு 687 பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட உள்ளது. ஊட்டி பூங்காவிற்கு கடந்த ஆண்டு 20 லட்சத்து 76 ஆயிரத்து 610 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த பல வருடங்களாக மாவட்டத்திற்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை காட்டிலும் சென்ற ஆண்டு வந்த சுற்றுலாப் பயணிகள் குறைவாக உள்ளதாக தெரியவருகிறது. முந்தைய தி.மு.க.,அரசு சுற்றுலாவை மேம்படுத்த தவறிவிட்டது. அம்மா ஆட்சியில் வரும் 5 ஆண்டுகளில் சுற்றுலாத்துறையில் தமிழகம் முதல் மாநிலமாக திகழும். ஊட்டியில் நிலவும் பார்க்கிங் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும். அதேநேரம் கடந்த 5 ஆண்டுகாலம் ஏன் இப்பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என நகர்மன்ற தலைவருக்கு கேள்வி எழுப்பினார். வரும் ஆண்டில் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 20 சதவீதம் அதிகரிக்கச் செய்யும் வகையில் சிறப்பாக செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago