முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் தலைமை செயலாளர் மாலதி மாறுதல் விவகாரம்: தமிழக அரசு விளக்கம்

சனிக்கிழமை, 21 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே. 22 - முன்னாள் தமிழக அரசு தலைமை செயலாளர் மாலதி மாறுதல் குறித்து ஒரு மாலை நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி, உண்மைக்கு புறம்பானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 20.5.11 அன்று வெளிவந்த ஒரு மாலை நாளிதழின் முதல் பக்கத்தில் தமிழக அரசு அதிரடி உத்தரவு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் என்ற தலைப்பின் கீழ் காத்திருப்போர் பட்டியலில் மாஜி தலைமை செயலர் மாலதி என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.முன்னாள் தலைமை செயலாளர் எஸ்.மாலதி, ஐ.ஏ.எஸ் 16.5.11 அன்று கூடுதல் தலைமை செயலர், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராக பணிமாற்றம் செயப்பட்டு அதன்படி அன்றைய தினமே அவர் அப்பதவியில் பொறுப்பேற்றுக் கொண்டார். எனவே, இம்மாலை நாளிதழில் வந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago