முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிஸ்பேன் டென்னிஸ்: ஆஸி. வீரர் ஹெவிட் சாம்பியன்

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

பிரிஸ்பேன், ஜன. 7 - பிரிஸ்பேனில் நடைபெற்ற டென்னிஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் லெய்டன் ஹெவிட் ஒற்றையர் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைச் தட்டிச் சென்றார். 

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹெவிட் உலக முன்னாள் நம்பர் _ 1 வீரரான ரோஜர் பெடரரை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

ஏ.டி.பி. சுற்றுப் பயணப் போட்டிகளில் ஒன்றான பிரிஸ்பேன் டென்னிஸ் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக வெகு விமர்சையாக நடந்தது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் களம் இறங்கினர். இதில் அவர்கள் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இதன் ஒற்றையர் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் பட்டம் யாருக்கு என்ற பலப்பரிட்சையில் ரோஜர் பெடரரும், லெய்டன் ஹெவிட்டும் இறங்கினர். 

ஆஸி. வீரர் காயத்தில் இருந்து மீண்டு நீண்ட நாள்களுக்குப் பின் போட்டிகளில் பங்கேற்றதால் அவர் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 

அதே போல பெடரரும் சமீபகாலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்த தொடரை வென்று ஆஸ்திரேலிய ஓபனுக்கு புத்துணர்ச்சியுடன் தயாராவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த இறுதிச் சுற்று ஆட்டம் 3 செட் வரை நீடித்தது. இதன் இறுதியில் ஹெவிட் 6_1, 4_6, 6_3 என்ற செட் கணக்கில் பெடரரை வீழ்த்தி பட்டம் வென்றார். இந்தஆட்டம் 2 மணி நேரம் 7 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. 

என் கடைசி அறுவை சிகிட்சையின் போது இனிமேல் போட்டிகளில் பங்கேற்க முடியாது என நினைத்தேன். ஆனால் இன்று கிடைத்துள்ள இந்த வெற்றி மிகுந்த மிகழ்ச்சி அளிக்கிறது என்று ஹெவிட் தெரிவித்தார். 

பெடரர் கூறுகையில், பிரிஸ்பேன் தொடரில் சிறப்பாக விளையாடியதாகவே கருதுகிறேன். இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறாதது வருத்தமே. இந்தத் தோல்வி எந்த விதத்திலும் ஆஸ்திரேலி ய ஓபன் தொடருக்கு தயாராவதற்கு பின்னடைவை ஏற்படுத்தாது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்