முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: இந்தியா தொடர்ந்து 2-வது இடம்

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

துபாய், ஜன. 7 - ஐ.சி.சி. யின் சமீபத்திய டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து 2_வது இடத்தை தக்க வைத்துள்ளது. 

கேப்டன் மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2 இடங்கள் முன்னேறி 3_வது இடத்தைப் பிடித்துள்ளது. 

ஆஷஸ் தொடர் முடிவடைந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது. 

இந்தப் பட்டியலில் இந்திய அணி 117புள்ளிகளைப் பெற்று 2_வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது. 

கேப்டன் கிரீம் ஸ்மித் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி மொத்தம் 133 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் அசைக்க முடியாத நிலையில் உள்ளது. 

சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் டெஸ்ட் நடந்தது. 

இந்தப் போட்டியில் கேப்டன் மைக்கேல் கிலார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 _ 0 என்ற கணக்கில் தொடரை வென்றது. 

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை 5_ 0 என்ற கணக்கில் வென்றதால் ஆஸ்திரேலிய அணி 5_வது இடத்தில் இருந்து இரண்டு இடங்கள் முன்னேறி 3_வது இடத்தை பிடித்துள்ளது. 

ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலியா 101 புள்ளிகள் பெற்று இருந்தது. தற்போது 111 புள்ளிகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

5 டெஸ்டிலும் தோற்றதால் கேப்டன் 

அலிஸ்டார் கூக் தலைமையிலான இங்கி 

லாந்து அணி 107 புள்ளிகளுடன் 4 _வது இடத்துக்கு பின்தங்கியது. 

தவிர, இந்த டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி 102 புள்ளிகளுடன் 5_வது இடத்திலும், இலங்கை அணி 6_வது இடத்திலும் உள்ளன. 

மேலும்,  மே.இ.தீவு 7 _வது இடத்திலும் நியூசிலாந்து 8 _வது இடத்திலும், ஜிம்பாப்வே 9_வது இடத்திலும், வங்காள தேச அணி கடைசி  இடத்திலும் உள்ளன. 

இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணியுடன் 2 டெஸ்டிலும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்டிலும் விளையாட உள்ளன. பிப்ரவரி மாதம் இந்தத் தொடர் நடக்கிறது. 

இங்கிலாந்து அணி அடுத்ததாக இலங்கை அணியுடன் ஜூன் மாதம் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் வெற்றி பெற இங்கிலாந்து திட்டம் தீட்டி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்