முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரன் இன்று பதவி ஏற்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.22 -​ தற்காலிக சபாநாயகராக இந்திய குடியரசு கட்சித்தலைவர் செ.கு.தமிழரசன் இன்று பதவி ஏற்கிறார். அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். தமிழகத்தின் 14-வது சட்டசபையின் முதல் கூட்டம், வரும் 23-ம் தேதி (நாளை) கூடுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்க உள்ளனர். இதற்காக தற்காலிக சபாநாயகராக இந்திய குடியரசு கட்சியின் செ.கு.தமிழரசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தற்காலிக சபாநாயகருக்கு இன்று கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். ராஜ்பவனில் இன்று காலை 9  மணிக்கு எளிமையாக நடக்கும் விழாவில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன், 23-ம் தேதி பகல் 12.30 மணிக்கு கோட்டையில் உள்ள சட்டபேரவை அரங்கில் புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார். வரும் 27-ம் தேதி காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடக்கிறது. பின் மீண்டும் ஜூன் 3-ம் தேதி சட்டப்பேவரை கூடுகிறது. அன்று காலை 10 மணிக்கு கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா உரையாற்றுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்